சச்சின்-ஆண்டர்சன் 'டிராபி' * இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்...

லண்டன்: இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின்-ஆண்டர்சன் டிராபி தொடர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து அணிகள் 1932 முதல் டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இந்திய கிரிக்கெட் போர்டு முதல் தலைவராக இருந்த ஆன்டனி டி மெலோவை கவுரவிக்கும் வகையில், 1951 முதல் இந்திய மண்ணில் நடந்த தொடர், 'ஆன்டனி டி மெலோ' டிராபி என அழைக்கப்பட்டது.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணி முதல் டெஸ்டில் பங்கேற்று 75 ஆண்டு ஆனதை குறிக்கும் வகையில், 2007 முதல் இங்கிலாந்தில் நடக்கும் டெஸ்ட் தொடர், 'பட்டோடி' டிராபி என அழைக்கப்பட்டது.
தற்போது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனை கவுரவிக்கும் வகையில், வரும் ஜூன் 20ல் துவங்கும் டெஸ்ட் தொடருக்கு 'சச்சின்-ஆண்டர்சன் டிராபி' என பெயரிடப்பட்டுள்ளது. 200 டெஸ்டில் பங்கேற்று சதத்தில் 'சதம்' அடித்தவர் இந்தியாவின் சச்சின் (15,921 ரன்). இதுபோல 188 டெஸ்டில் 704 விக்கெட் சாய்த்துள்ளார் இங்கிலாந்தின் ஆண்டர்சன்.
மேலும்
-
நின்ற லாரி மீது பஸ் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி
-
ரசாயன நிறுவனங்களில் மதுவிலக்கு போலீஸ் ஆய்வு
-
கமல் சொத்து மதிப்பு எவ்வளவு? வேட்பு மனுவில் சொன்னது இதுதான்!
-
ரோட்டரி கிளப் சார்பில் இளையராஜாவுக்கு விருது
-
அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர்- பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டை
-
அகம் நெகிழ... மனம் மகிழ!