அமெரிக்காவில் வெடித்த கலவரம்; கடும் நடவடிக்கை எடுக்க டிரம்ப் உத்தரவால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் ஏஸ்சல்ஸில் வெடித்த கலவரத்தால், புலம்பெயர்ந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டம் வெடித்தன. இந்நிலையில், அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு காலத்தில் சிறந்த அமெரிக்க நகரமாக இருந்த லாஸ் ஏஞ்சல்ஸ், சட்டவிரோத குடியேறிகளாலும், குற்றவாளிகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
இப்போது வன்முறை, கிளர்ச்சி கும்பல்கள் எங்கள் நாடு கடத்தல் நடவடிக்கைகளை நிறுத்த தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த சட்டவிரோத கலவரங்கள் எங்கள் உறுதியை வலுப்படுத்துகின்றன.
உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம், பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அட்டர்னி ஜெனரல் பாண்டி ஆகியோர், மற்ற அனைத்து தொடர்புடைய துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸை புலம்பெயர்ந்தோர் படையெடுப்பிலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நான் உத்தரவிட்டு உள்ளேன். லாஸ் ஏஸ்சல்ஸில் சட்டம் ஒழுங்கு மீட்டெடுக்கப்படும். சட்டவிரோத குடியேறிகள் வெளியேற்றப் படுவார்கள். அவர்களின் பிடியில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் விடுவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., காஷ் படேல் கூறியதாவது: ஒரு போலீஸ்காரரை தாக்கினால் நீங்கள் சிறைக்கு செல்ல நேரிடும். நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? எப்படி இங்கு வந்தீர்கள் அல்லது எந்த இயக்கம் உங்களுக்கு பின் ஆதரவாக இருக்கிறது என்பது எங்களுக்கு முக்கியமல்ல. உள்ளூர் போலீசார் கூறுவதை நீங்கள் கேட்கவில்லை என்றால், நாங்கள் விசாரிக்க நேரிடும். இவ்வாறு காஷ் படேல் எச்சரித்துள்ளார்.

மேலும்
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!