2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிவு; ஒரு சவரன் ரூ.73,600!

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,600க்கு விற்பனை ஆகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்றம் காணப்படுகிறது. நேற்று (ஜூன் 16) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,440க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,305க்கு விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று (ஜூன் 17) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,600க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.105 சரிந்து, ஒரு கிராம் ரூ.9,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 சரிந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் 15 பேர் பலி
-
சாலுமரட திம்மக்கா வாழ்க்கை திரைப்படமாகிறது.
-
ரூ.17 கோடி மோசடி: மலேஷியா தப்ப முயன்ற அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகன் கைது
-
கட்டடத்தின் தரத்திலும், ஆயுளிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் நீரின் பி.எச்., அளவு
-
பண மோசடி விவகாரம்: கர்நாடக துணை முதல்வர் சகோதரருக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
பனைமரம் ஒரு ஜாதியின் மரமா? சீமான் ஆவேச பேட்டி