ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி: சென்னையில் 'லோகோ' அறிமுகம்

சென்னை: தமிழகத்தில் நடக்க உள்ள ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரின் 'லோகோ'வை, துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டார்.
ஹாக்கி இந்தியா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், தமிழகத்தில் நவ., 28- டிச., 10 நடக்க உள்ளது.
போட்டிகள், சென்னை, எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கம், மதுரை ஹாக்கி அரங்கிலும் நடக்கின்றன. இத்தொடரில், 24 சர்வதேச அணிகள் பங்கேற்கின்றன.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், போட்டி தொடர்பாக, ஹாக்கி இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின், உலக கோப்பை தொடரின் 'லோகோ'வை வெளியிட்டு உதயநிதி பேசியதாவது:
உலக கோப்பை ஹாக்கி போட்டிக்காக, விளையாட்டுத்துறை பட்ஜெட்டில், 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மதுரை ஹாக்கி அரங்கின் சீரமைப்பு பணிக்கான தொகையும் உள்ளடங்கும். இப்போட்டிகள், சென்னை, மதுரையில் நடப்பது பெருமை.
தமிழகத்தை விளையாட்டு போட்டிக்கான தலைமையகமாக உருவாக்க அனைவரும் ஒன்றாக உழைப்போம். தென்பகுதியிலும் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் மதுரையில் போட்டியை நடத்துகிறோம்.
இவ்வாறு அவர் பேசினர்.
மேலும்
-
துரை வைகோவுக்கு மத்திய அமைச்சர் பதவி? கூட்டணிக்கு 'குட் பை' சொல்லும் மூடில் ம.தி.மு.க.,
-
அரபி கல்லுாரிகளில் ஐ.எஸ்., பயங்கரவாத பயிற்சி; தற்கொலை படைகளை உருவாக்கியது அம்பலம்
-
'கிளி ஜோசியம் பார்த்தேன்; பா.ம.க.,வில் குழப்பம் தீரும்'
-
பயங்கரவாதிகளின் புகலிடம் கோவை?
-
அழித்தார் விபூதி; எடுத்தார் 'செல்பி' திருமாவளவனின் அவசர கெட்டப்
-
'முதல்வர் கண்ணில் இதெல்லாம் படக்கூடாது' ராகுல் பேனரை அகற்றிய போலீசார்