த.வெ.க., தலைவர் விஜய் பிறந்த நாள் விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க.,வினர், கட்சி தலைவர் பிறந்த நாள் விழாவை பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி கொண்டாடினர்.
கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட த.வெ.க., சார்பில், அக்கட்சி தலைவர் விஜய் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கட்சியினர் கொண்டாடினர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர் கனிமொழி, பொருளாளர் ஜவகர், ஒன்றிய நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி வரதன், திலீப்குமார், ஸ்டாலின், தியாகதுருகம் ரவி, சின்னசேலம் சுதாகர், சுரேஷ், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் சுப்ரமணியன், அறிவுமணி, நகர நிர்வாகிகள் அருண்குமார், அசோக், இளைஞரணி சின்னதுரை, மகளிரணி வளர்மதி, தொண்டரணி ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஈரானில் 6 விமான நிலையங்களில் தாக்குதல்; 15 போர் விமானங்களை அழிப்பு; இஸ்ரேல் அறிவிப்பு
-
மாம்பழம் கொள்முதல்; தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து: பிரதமர் மோடிக்கு சசி தரூர் பாராட்டு
-
கேரளாவில் காங்கிரஸ்... குஜராத்தில் பா.ஜ., ; 4 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்
-
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் எதிரொலி; சென்செக்ஸ் சரிவு!
-
கலந்தாய்வுக்கு முன்னரே நிரம்புது ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள்; தென் மாவட்டங்கள் 'பிஸி'