கர்நாடகாவில் குறைந்தது கொரோனா

பெங்களூரு : கர்நாடகாவில் கொரோனா தொற்று பரவும் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சமீப காலமாக தொற்று பரவும் எண்ணிக்கையைவிட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர்.

கர்நாடக சுகாதாரம் மற்றும் குடும்பத்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கர்நாடகாவில் நேற்று மட்டும் 17 பேருக்கு தொற்று ஏற்பட்டது. 46 பேர் குணமடைந்தனர். 184 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதில், தொற்று பாதிக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உடையவர்கள் 9.2 சதவீதம் பேர். மாநிலம் முழுதும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 251' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement