இலங்கை அணி முன்னிலை: பதும் நிசங்கா சதம்

கொழும்பு: இரண்டாவது டெஸ்டில் பதும் நிசங்கா சதம் கடந்து கைகொடுக்க, இலங்கை அணி முன்னிலை பெற்றது.
இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 220/8 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் தைஜுல் இஸ்லாம் (33) ஆறுதல் தந்தார். வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 247 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இலங்கை சார்பில் அசிதா பெர்ணான்டோ, சோனல் தினுஷா தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
பின் முதல் இன்னிங்சை துவக்கிய இலங்கை அணிக்கு பதும் நிசங்கா, லஹிரு உதாரா கைகொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 88 ரன் சேர்த்த போது உதாரா (40) அவுட்டானார். அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் அரைசதம் கடந்தார். மறுமுனையில் அசத்திய பதும் நிசங்கா, டெஸ்ட் அரங்கில் தனது 4வது சதத்தை பதிவு செய்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 194 ரன் சேர்த்த போது நயீம் ஹசன் பந்தில் சண்டிமால் (93) அவுட்டானார்.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 290/2 ரன் எடுத்து, 43 ரன் முன்னிலை பெற்றிருந்த போது வெளிச்சமின்மையால் 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. நிசங்கா (146), பிரபாத் ஜெயசூர்யா (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
-
காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு
-
எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்
-
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
-
சில வரி செய்திகள்: