'பிளே-ஆப்' சுற்றில் திண்டுக்கல்: நெல்லை அணி ஏமாற்றம்

நெல்லை: டி.என்.பி.எல்., 'பிளே-ஆப்' சுற்றுக்கு திண்டுக்கல் அணி முன்னேறியது. லீக் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வீழ்த்தியது.
நெல்லையில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் நெல்லை, 'நடப்பு சாம்பியன்' திண்டுக்கல் அணிகள் மோதின.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக் (5) ஏமாற்றினார். சந்தோஷ் குமார் (26), அதிஷ் (19), நிர்மல் குமார் (16), அத்னன் கான் (22) ஆறுதல் தந்தனர். பின் இணைந்த சோனு யாதவ், ஹரிஷ் ஜோடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசியது.
நெல்லை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. ஹரிஷ் (43 ரன், 3x6, 4x4), சோனு (39 ரன், 2x6, 3x4) அவுட்டாகாமல் இருந்தனர். திண்டுக்கல் சார்பில் கேப்டன் அஷ்வின், வருண், பெரியசாமி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு கேப்டன் அஷ்வின் (5), ஷிவம் சிங் (2) ஏமாற்றினர். பாபா இந்திரஜித் (15) சோபிக்கவில்லை. பின் இணைந்த மான் பப்னா, விமல் குமார் ஜோடி நம்பிக்கை தந்தது. நான்காவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது மான் பப்னா (38) அவுட்டானார். ராக்கி பாஸ்கர் பந்தில் விமல் குமார் (45) ஆட்டமிழந்தார். சோனு யாதவ் வீசிய 17வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய ஹன்னி சைனி (37) 'ரன்-அவுட்' ஆனார்.
சோனு யாதவ் வீசிய 19வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி அடித்த தினேஷ் வெற்றியை உறுதி செய்தார்.
திண்டுக்கல் அணி 18.4 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 180 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் (17), கார்த்திக் சரண் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
ஸ்டாலினை போல என் மகன் இல்லையே: ராமதாஸ் ஆதங்கம்
-
தி.மு.க., போக்குவரத்து சங்க தேர்தல் வழக்கு: துரைமுருகன் பஞ்ச்; சண்முகத்திற்கு அடி
-
காங்கிரசாகவே மாறும் தமிழக பா.ஜ.,: 12 துணை தலைவர்கள் நியமிக்க முடிவு
-
எடை இயந்திரம் - கைரேகை கருவி இணைப்பு அமல்படுத்த அவகாசம் அளிக்க வலியுறுத்தல்
-
அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் பங்களிப்பு கூடாது மார்க்சிஸ்ட் மாநிலக்குழு கூட்ட தீர்மானம்
-
சில வரி செய்திகள்: