நியூ காலனி சந்திப்பில் சாலை ஆக்கிரமிப்பு

ஆவடி அடுத்த மோரை, வீராபுரம் பிரதான சாலையில், நியூ காலனி மும்முனை சந்திப்பில் சாலையோர ஆக்கிரமிப்பு உள்ளது.

அங்கு மீன் கடைகள் நடத்தும் சிலர், கழிவுநீரை சாலையில் ஊற்றுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், கடைகளுக்கு வருவோரின் வாகனங்கள், சாலையில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement