சிம்ரன், பிரீத்தி 'தங்கம்': இந்திய ஓபன் பாரா தடகளத்தில்

பெங்களூரு: இந்திய ஓபன் பாரா தடகளத்தில் சிம்ரன், பிரீத்தி பால் தங்கம் வென்றனர்.
பெங்களூருவில், மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய ஓபன் பாரா தடகள சாம்பியன்ஷிப் 7வது சீசன் நடந்தது. பெண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் ('டி12, டி35' பிரிவு) பைனலில், இலக்கை 24.80 வினாடியில் கடந்த உ.பி.,யின் சிம்ரன் தங்கம் வென்றார். அடுத்த இரு இடங்களை குஜராத்தின் தாமோர் தேஜல் (25.80 வினாடி), ஒடிசாவின் ஜானகி ஓரம் (30.00 வினாடி) பிடித்தனர்.


பெண்களுக்கான 200 மீ., 'டி35' பிரிவு பைனலில் உ.பி.,யின் பிரீத்தி பால் (31.40 வினாடி) தங்கத்தை தட்டிச் சென்றார். ஹரியானாவின் அவானி (44.20 வினாடி), ராஜஸ்தானின் சுனேத்ரா (58.50 வினாடி) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 'கிளப் த்ரோ' ('எப்32, எப்51' பிரிவு) பைனலில் ஹரியானாவின் தரம்பிர் (30.37 மீ.,) தங்கம் வென்றார். மற்ற ஹரியானா வீரர்களான பிரனவ் சூர்மா, அமித் குமார் வெள்ளி, வெண்கலத்தை தட்டிச் சென்றனர்.


ஆண்களுக்கான வட்டு எறிதல் 'எப்37' பிரிவு பைனலில் ஹரியானாவின் ஹேனி (53.81 மீ.,) தங்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் ('டி42, டி63' பிரிவு) ராஜஸ்தானின் மகேந்திர குர்ஜார் (5.73 மீ.,) தங்கம் வென்றார்.

Advertisement