நீதிமன்ற பெயரை தவறாக பயன்படுத்திய பெண் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை: உயர் நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய பெண் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜி.கே.எம்.காலனியைச் சேர்ந்த பாலசெந்தில்முருகன் என்பவர் தாக்கல் செய்த மனு: புளியந்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், வரதட்சணை கொடுமை செய்ததாக மனைவி புகார் அளித்தார்.
மனைவி அளித்த புகாரில், எங்கள் மீது உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக, புளியந்தோப்பு மகளிர் காவல் நிலைய எஸ்.ஐ. ராஜேஸ்வரி, மாநகர கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டு அறை இன்ஸ்பெக்டர் அம்பிகா இருவரும், உயர் அதிகாரிகள் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு தவறான தகவலை தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி, உள்துறை, டி.ஜி.பி., மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோரிடம் புகார் அளித்தேன். வரதட்சணை புகாரில் வழக்குப்பதிவு செய்யும்படி, உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. எனவே, நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.குமரப்பன் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றத்தின் பெயரை தவறாக பயன்படுத்திய, இரு பெண் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை விரைந்து முடித்து, தண்டிக்க வேண்டும் . இது தொடர்பாக மனுதாரர் அளித்த மனுவை, தமிழக அரசு, டி.ஜி.பி., மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.





மேலும்
-
இந்திய ராணுவம் ட்ரோன் வீசி தாக்குதல்: உல்பா பயங்கரவாதிகள் அலறல்
-
பீஹாரில் மீண்டும் அதிர்ச்சி; ஒரே வாரத்தில் 2வது பா.ஜ., தலைவர் சுட்டுக் கொலை
-
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!
-
தெலங்கானா எம்எல்சி அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் காயம்
-
கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? 'ப' வடிவ இருக்கை குறித்து அன்புமணி விமர்சனம்
-
பீஹார் வாக்காளர் பட்டியல்; வெளிநாட்டினர் ஏராளம் பேர் இருப்பதாக தேர்தல் கமிஷன் தகவல்