கற்றுத் தந்த பாடம் * சிராஜ் உருக்கம்

மான்செஸ்டர்: லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 22 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 193 ரன்னை விரட்டிய இந்திய அணி, ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 147/9 ரன் எடுத்து தவித்தது. கைவசம் ஒரு விக்கெட் மட்டும் மீதமுள்ள நிலையில், இந்தியா வெற்றிக்கு 46 ரன் தேவைப்பட்டன.
தனிநபராக போராடிய ஜடோஜாவுக்கு (61 ரன்*, 181 பந்து), சிராஜ் (4 ரன், 30 பந்து) கைகொடுத்தார். இருப்பினும், சோயப் பஷிர் 'சுழலில்' சிராஜ், துரதிருஷ்டவசமாக போல்டாக, இந்தியாவின் வெற்றி நழுவியது. இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்த சோகத்தில் சிராஜ், ஆடுகளத்தில் அப்படியே அமர்ந்தார். இங்கிலாந்து அணியின் புரூக், ஜோ ரூட் ஆறுதல் தந்தனர்.
இதுகுறித்து சிராஜ் வெளியிட்ட செய்தியில்,' சில போட்டிகளின் முடிவு எப்படி இருந்தாலும், அவை, நமக்கு என்ன கற்றுத் தந்தன என்பதை பொறுத்து, என்றும் மனதில் நிலைத்து விடும்,' என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Advertisement