நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது

3


புதுடில்லி: தங்கம் கடத்தல் வழக்கில், காபிபோசா சட்டமும் ரன்யா ராவ் மீது பாய்ந்தது. ஆலோசனைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.

கன்னட திரையுலகை சேர்ந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் தங்கம் கடத்தலில் ஈடுபட்டார் என்கிற குற்றம் உறுதி செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கத்தை பலமுறை தனது விமான பயணத்தின் மூலம் இவர் கடத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.



இவர் இப்படி நகைகளை கடத்துவதற்கு கர்நாடக போலீஸ் உயர் அதிகாரியாக இருக்கும் தனது வளர்ப்பு தந்தையின் செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டார் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. இவர் மீது ஏற்கனவே வருமானவரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை வழக்கு தொடர்ந்து உள்ளன.


https://www.youtube.com/embed/kuTgpWeqOVk

அதே சமயம் இவர் பலமுறை தனது ஜாமினுக்காக விண்ணப்பித்து அவை நிராகரிக்கப்பட்டன இந்த நிலையில் தற்போது மோசடி பண பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக கூறி காபிபோசா சட்டமும் இவர் மீது பாய்ந்துள்ளது. இவர் மீதான நடவடிக்கையை, வழக்குகளை ஆய்வு செய்யும் நீதித்துறை ஆலோசனை குழு உறுதி செய்துள்ளது. இதனால் ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது.

Advertisement