மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16
மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்து ரூ.பல கோடி மோசடி நடந்தது தொடர்பாக பில் கலெக்டர் உட்பட மேலும் 4 பேரை கமிஷனர் சித்ரா நேற்று சஸ்பெண்ட் செய்தார்.
இம்முறைகேடு தொடர்பாக இதுவரை மாநகராட்சி ஓய்வு உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 தி.மு.க., மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். முறைகேட்டில் தொடர்புடையதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 55 பேர் பட்டியல் தயார் செய்துள்ளனர். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்றுமுன்தினம் 6 பில் கலெக்டர்கள் உட்பட 7 பேரை கமிஷனர் சித்ரா சஸ்பெண்ட் செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மேலும் ஒரு பில் கலெக்டரான காளிமுத்து, ஒப்பந்த ஊழியர்கள் பாலமுருகன், நாகராஜன், மகா பாண்டியன் ஆகிய 4 பேரை கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார்.
இம்முறைகேடு தொடர்பாக முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் ஏற்கனவே 5 பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்தார். தற்போது வரை 8 பேர் கைதும், 11 பேர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டுள்ளனர். 5 மண்டல தலைவர்கள் உட்பட 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
தமிழகத்தில் உளவுத்துறை உறங்குகிறதா? ஹிந்து முன்னணி சந்தேகம்
-
சங்கூர் பாபா மதமாற்ற விவகாரம்; 14 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு
-
நக்சல் அமைப்பிற்கு மிகப்பெரிய பலத்த அடி; ஓராண்டில் மாவோயிஸ்டுகள் 357 பேர் சுட்டுக்கொலை!
-
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கு; ஓராண்டுக்கு ஜாமின் கிடைக்காது
-
பஞ்சாப் தொழிலாளிக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு
-
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு