ரூ.21.43 லட்சம் செலவில் வாய்க்கால் பாலம் பணி

திருபுவனை : புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன பிரிவு சார்பில், திருபுவனை தொகுதிக்குட்பட்ட கலிதீர்த்தாள்குப்பம் வெற்றி வினாயகர் நகரில் திருபுவனை ஏரி வரத்து வாய்காலின் குறுக்கே ரூ.21.43 லட்சம் செலவில் பாலம் கட்டுமானபணிக்கான தொடக்க விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப்பொறியாளர் செல்வராசு, இளநிலைப் பொறியாளர் பாலாஜி, ஒப்பந்ததாரர் விஜயன் மற்றும் மதகடிப்பட்டு, கலிதீர்த்தாள்குப்பம் கிராம பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement