ரஷ்யாவில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்; ரிக்டரில் 6.4 ஆக பதிவு

மாஸ்கோ; ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ரஷ்யாவின் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் அண்மையில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில், கம்சட்கா தீபகற்பத்தில் இன்று காலை மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிறிதுநேரத்தில் மீண்டும் 5.3 மற்றும் 4.5 என்ற ரிக்டர் அளவுகோலில் இரு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மொத்தம் 3 முறை நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் கூறி உள்ளது.
வாசகர் கருத்து (1)
SUBBU,MADURAI - ,
22 ஜூலை,2025 - 10:49 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சூரத் விமான நிலையத்தில் 28 கிலோ தங்கம் பறிமுதல் : துபாயில் இருந்து கடத்தி வந்த தம்பதி கைது
-
என் கூட்டணி தான் பெருசு; மாநாட்டில் அறிவிக்கிறேன் என சீமான் சூசகம்!
-
சீமானுக்கு புதிய பாஸ்போர்ட்: சென்னை ஐகோர்ட் உத்தரவு
-
போயிங் விமானங்களில் எரிபொருள் சுவிட்சுகளில் பிரச்னையில்லை : ஏர் இந்தியா அறிக்கை
-
மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை; இ.பி.எஸ்., தேர்தல் வாக்குறுதி
-
ஜூலை 26 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்
Advertisement
Advertisement