கணவன் மாயம் மனைவி புகார்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான கணவனை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே பசுங்காயமங்கலத்தை சேர்ந் தவர் ஷபியுல்லா, 54; இவர், தியாகதுருகம் மின்வாரிய அலுவலக ஊழியர்.

கடந்த 16ம் தேதி காலை 8:00 மணிக்கு, வழக்கம்போல் பணிக்கு சென்ற ஷபியுல்லா நீண்ட நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

மாயமான கணவரை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது மனைவி நர்கீன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement