நகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு நிறுத்தி வைப்பு
சிவகங்கை:கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதியில் உள்ள, 12,000க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில், 375 கிராம ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்பட்டும், முதல் தரத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுடன், சில ஊராட்சிகளை இணைத்து, பேரூராட்சிகளாக தரம் உயர்த்தியும் அறிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் நிதியின் மூலம் செயல்படும் தேசிய வேலை உறுதி திட்ட பணிகள், தமிழக அரசின் கனவு இல்ல திட்ட வீடுகள் போன்ற கிராம ஊராட்சிகளுக்கு கிடைத்து வந்த அனைத்து சலுகைகளும், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்கள், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கிராம ஊராட்சிகளுடன் இணைந்த கிராமங்களுக்கு கிடைக்காத சூழல் எழுந்தது.
இதனால் அரசின் மீது கிராம மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. சட்டசபை தேர்தலின் போது, இது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என கருத்துகள் எழுந்தன.
இதையடுத்து நகராட்சி களுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு, கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில், 'அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு, இரண்டாவது கட்டமாக நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால், இத்திட்ட நிதி நகராட்சியுடன் இணைந்த கிராம ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்திய கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.
'இதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால், கிராம ஊராட்சிகள் இணைப்பு, பேரூராட்சியாக தரம் உயர்த்தும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்' என்றார்.
மேலும்
-
கேமிங் விளையாட்டில் ரூ.10 லட்சம் பரிசு வென்றவருக்கு கேமிங் அதிகாரி பதவி: ஐக்கூ சீன நிறுவனம் கவுரவிப்பு
-
ராகுல் கருத்தில் இருந்து மாறுபடும் காங்கிரஸ் எம்.பி.,க்கள்
-
ஆகஸ்டில் இயல்பு மழை; செப்டம்பரில் கூடுதல் மழை; வானிலை மையம் தகவல்
-
லாக் அப் மரணங்களை மூடி மறைக்கும் முயற்சி: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
கிளம்பும் நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு: லண்டன் செல்லும் ஏர் இந்தியா ட்ரீம் லைனர் விமானம் ரத்து
-
அயர்லாந்தில் இந்தியர் மீது மர்ம கும்பல் தாக்குதல்: மீண்டும் ஒரு கொடூர சம்பவம்!