எஸ்.டி.பி., அமைக்கும் பிரச்னை விளக்க கூட்டம் ஒத்திவைப்பு

கோவை:
சின்னவேடம்பட்டியில் எஸ்.டி.பி., அமைப்பது குறித்த செயல்முறை விளக்க கூட்டத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சின்னவேடம்பட்டியில் தினமும், 9.95 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கும் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்(எஸ்.டி.பி.,) கட்டுவதற்கு, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.அப்பகுதி மக்கள், விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் இதற்கான பணிகள் துவங்கியதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப் பட்டன.

இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் இதுதொடர்பான செயல்முறை விளக்க கூட்டத்துக்கு,நேற்று மாலை, 4:00 மணிக்கு மாநகராட்சி தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

சின்னவேடம்பட்டி பகுதி மக்கள், விவசாயிகள், 50 பேர் பங்கேற்று, முறையான அறிவிப்பு வழங்கவில்லை என, மாநகராட்சி கமிஷனர், அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டம் ரத்து செய்யப் பட்டது.

விவசாயிகள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் காளிச்சாமி கூறுகையில், ''குறிப்பிட்ட கால அவகா சத்தில் முறையாக அறிவிப்பு கொடுத்து, கூட்டம் நடத்துமாறு கமிஷனரிடம் முறையிட்டோம். அவரும் சட்ட விதிகளின்படி நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்,'' என்றார்.

Advertisement