சக பயணியை தாக்கிய சம்பவம் எதிரொலி; பயணிக்கு தடை விதித்தது இண்டிகோ!

புதுடில்லி: மும்பையில் இருந்து கோல்கட்டா சென்ற இண்டிகோ விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அசாமின் கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹுசைன் அகமது மஜும்தார் (32) மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஜிம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் இண்டிகோ விமானத்தில், மும்பையில் இருந்து கோல்கட்டா சென்று கொண்டிருந்தார். அவர் சக பயணியால் கன்னத்தில் அறையப்பட்டார்.
உடல்நிலை சரியில்லாதபோது காரணமே இல்லாமல் ஒருவர் தன்னை அறைந்ததால் அகமதுவுக்கு Panic attack ஏற்பட்டது. உடனே பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். தாக்குதல் நடத்தியவரை மற்ற பயணிகள் கண்டித்தனர்.
கோல்கட்டா விமான நிலையத்தை அடைந்ததும் தாக்குதல் நடத்திய நபர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தற்போது, விமானத்தில், பயணி ஒருவர், சக பயணியை தாக்கிய சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்ட விதிமுறைகளின்படி, தாக்குதல் நடத்திய நபர், இண்டிகோ விமானங்களில் இனி பயணிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.


