உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் பெருந்துறை வேளாண்மை
பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை
தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 4,502 மூட்டைகளில், ௨.௧௦
லட்சம் கிலோ கொப்பரை வரத்தானது. முதல் தரம் கிலோ, 207.16 ரூபாய் முதல்
233.60 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 27.89 ரூபாய் முதல் 223.66 ரூபாய் வரை,
௪.௭௦ கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
*
புன்செய்புளியம்பட்டி பூ சந்தையில், ஆடிப்பெருக்கை ஒட்டி,
பூக்களின் விலை நேற்று உயர்ந்தது. நேற்று முன்தினம் கிலோ, 760
ரூபாய்க்கு விற்ற மல்லிகை, 1,040 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் கிலோ, 200
ரூபாய்க்கு விற்ற முல்லை, 480 ரூபாய்; 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி, 300
ரூபாய்; அரளி, 120 ரூபாய், செண்டுமல்லி, 160 ரூபாய்க்கு விற்றது. விலை
உயர்ந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* சித்தோடு வெல்லம்
சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட நாட்டு சர்க்கரை, 1,800
மூட்டை வரத்தானது. ஒரு மூட்டை, 1,250 முதல், 1,400 ரூபாய்க்கு
விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,100 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை,
1,350 முதல், 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 600 மூட்டைகள் வரத்தாகி ஒரு
மூட்டை, 1,300 முதல், 1,400 ரூபாய்க்கு விற்றது. கடந்த வாரத்தைவிட அச்சு
வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை குறைந்தது.
* சத்தியமங்கலம்
பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 1,040
ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் முல்லை-480, காக்கடா-350,
செண்டுமல்லி-160, கோழிக்கொண்டை-160, ஜாதிமுல்லை-750,
கனகாம்பரம்-900, சம்பங்கி-300, அரளி-120, துளசி-70, செவ்வந்தி-300
ரூபாய்க்கும் விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர்
கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம்
நேற்று நடந்தது. கதளி ஒரு கிலோ, 62 ரூபாய், நேந்திரன், 31 ரூபாய்க்கும்
விற்பனையானது. செவ்வாழை தார், 960 ரூபாய், தேன்வாழை, 640, பூவன்,
610, ரஸ்த்தாளி, 700, மொந்தன், 390, ரொபஸ்டா மற்றும் பச்சைநாடான், தலா
510 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 3,880 வாழைத்தார்களும்,
8.03 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 18
ரூபாய் முதல் 52 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தான, 23,820
தேங்காய்களும், 7.80 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* கோபி அருகே
மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை
நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), பச்சை பயிர், வெந்தயம்,
தட்டைப்பயிர் என தலா, 120 ரூபாய்க்கு விற்பனையானது. குண்டு உளுந்து,
பாசிப்பருப்பு தலா, 130 ரூபாய்க்கு விற்பனையானது. கடுகு, 110,
சீரகம், 360, கொள்ளு, 80, மிளகு, 860, வரமிளகாய், 170, புளி, 240,
பூண்டு, 160 ரூபாய் முதல், 180 ரூபாய், கருப்பு சுண்டல், 100 ரூபாய்,
கடலைப்பருப்பு மற்றும் வெள்ளை சுண்டல், 110 ரூபாய்க்கும்
விற்பனையானது.
ஆடிப்பெருக்கால் விடுமுறை
எழுமாத்துார்
ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று நடக்கும் தேங்காய் ஏலம், நாளை
நடக்கும் கொப்பரை ஏலத்துக்கு, ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு
விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொடுமுடி ஒழுங்கு முறை
விற்பனை கூடத்திலும், நாளை நடக்கும் தேங்காய், கொப்பரை ஏலத்துக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
அமெரிக்காவில் இந்தியர்கள் 4 பேர் மாயம்; தேடும் பணி தீவிரம்
-
உபியில் சோகம்; கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பரிதாப பலி
-
5 ஆண்டுகளில் ஆகச்சிறந்த நாடாக மாற்றுவேன்; மாடு மேய்க்கும் போராட்டத்தில் சீமான் பேச்சு
-
5 கோடியை கடந்த தென்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் வர்த்தகம்
-
காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி
-
பௌர்ணமியின் மகத்துவம் என்ன?