காசாவில் துயரம்; உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பாலஸ்தீனர்கள் 48 பேர் பலி

ஜெருசலேம்: காசா உதவி மையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்தனர்.
இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட நாட்களாக போர் நடந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் ராணுவ தாக்குதலில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா உதவி மையங்களில், நிவாரண பொருட்களுக்காக காத்திருந்த 1000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் பசி, பட்டினியை ஆயுதமாக பயன்படுத்துவதாகவும் ஐநா குற்றம்சாட்டி உள்ளது.
இஸ்ரேல் தாக்குதல் ஒரு பக்கம் மறுபக்கம் காசாவில் உள்ள ஜிகிம் கிராசிங்கில் உள்ள உதவி மையத்தில் ஏற்பட்ட, கூட்ட நெரிசலில் சிக்கி, பாலஸ்தீனர்கள் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 12க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
காசாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜூன் மாதத்திலிருந்து குழந்தைகள் 89 பேரும், வயதானவர்கள் 65 பேரும் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள், காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










மேலும்
-
இறுதிச்சடங்கில் பங்கேற்ற லஷ்கர் பயங்கரவாதிக்கு வலை!
-
ஆந்திராவில் சோகம்: குவாரியில் பாறைகள் சரிந்து 6 பேர் பலி; 10 பேர் படுகாயம்
-
ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மீது ராணுவ அதிகாரி தாக்குதல்; வீடியோ வெளியாகி பரபரப்பு
-
500 ஆண்டுகள் கழித்து மீண்டும் சீறத் தொடங்கிய எரிமலை: ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்; அனைத்து கட்சி கூட்டம் நடத்த திருமா வலியுறுத்தல்
-
தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் தகவல்