அதிக வேலைவாய்ப்பு வழங்கிய மாநிலங்கள் தமிழகம் முதலிடம் என முதல்வர் பெருமிதம்: தொழில்துறையில் நாட்டின் வேலைவாய்ப்பு 5.92% உயர்வு

சென்னை: கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், நாட்டின் தொழில்துறையில் வேலைவாய்ப்பு 5.92 சதவீதம் அதிகரித்ததாக, மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின், ஆண்டு தொழில்துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகம் முன்னிலையில் இருப்பது, தமிழக அரசின் சாதனை முயற்சிகளுக்கு பலன் என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஆய்வு முடிவின்படி, நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கும் மாநிலங்களில், 15 சதவீத பங்களிப்புடன் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த நான்கு இடங்களில் முறையே, குஜராத், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகியவை உள்ளன.
இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், சட்டம் - ஒழுங்கை பேணிக் காத்து, தொழில் செய்வதற்கான சூழலை மேம்படுத்தி, தடையற்ற மின்சாரம், போக்குவரத்து வசதிகள் என, அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கி, வேலைக்கு தேவையான திறன்களை இளம் தலைமுறையினருக்கு அளித்து, நாளும் தீட்டிய திட்டங்களால், இந்த சாதனை சாத்தியமானதாக கூறியுள்ளார்.
தமிழகம் முதன்மை 'மற்ற மாநிலங்கள் முதலீட்டுத் தொகையை மட்டுமே கவனிக்கும் நிலையில், தமிழக அரசு வேலைவாய்ப்பை முதன்மைப்படுத்துகிறது' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், இந்தியாவின் வேகமாக முன்னேறும் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலம் என்ற பெருமையுடன், மிகப்பெரிய அளவில் தொழில் துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை வழங்கும் மாநிலமாகவும் திகழ்வதாக கூறியுள்ளார்.
@block_B@
* கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், நாட்டின் தொழில்துறையில் வேலைவாய்ப்பு 5.92% உயர்ந்து 1.95 கோடியானது
* 2022 - 23ம் நிதியாண்டில், வேலைவாய்ப்பு எண்ணிக்கை, 1.84 கோடியாக இருந்தது
* அதிக வேலைவாய்ப்பு வழங்கியதில், தமிழகம், குஜராத் மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், கர்நாடகா முதல் 5 இடங்களில் உள்ளன
* தொழில்துறையில் முதலீடு செய்யப் பட்ட மூலதனம், 61.39 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 68.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்வு
* தயாரிப்பு அடிப்படையிலான ஜி.வி.ஏ., எனப்படும் மதிப்பு கூட்டு குறியீடு, 11.90 சதவீதம் உயர்ந்து, 24.58 லட்சம் கோடியானது
* உலோகம், வாகனம், ரசாயனம், உணவு மற்றும் மருந்து ஆகிய ஐந்து துறைகள் மதிப்பு கூட்டு குறியீட்டில் முதல் 5 இடங்களை பிடித்தன.block_B
மேலும்
-
என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்
-
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!
-
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
-
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
-
தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்