தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 4 மாதங்களில் இல்லாத உச்சம்

புதுடில்லி: நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 3.50 சதவீதமாக அதிகரித்து, நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு கண்டுள்ளதாக, மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் வளர்ச்சி 1.50 சதவீதமாக இருந்தது. எனினும், கடந்தாண்டு ஜூலை மாத தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியான, ஐந்து சதவீதத்துடன் ஒப்பிடுகையில், இது குறைவே.
தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகளே, கடந்த மாதம் வளர்ச்சி அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தன. தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்தாண்டு ஜூலை மாதம் 4.70 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் 5.40 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
மின்சாரத் துறை வளர்ச்சி 0.60 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், சுரங்கத் துறை வளர்ச்சி 7.20 சதவீதம் சரிவு கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி சராசரி 2.30 சதவீதமாக சரிந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் 5.40 சதவீதமாக இருந்தது.
மேலும்
-
என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்
-
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!
-
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
-
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
-
தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்