பேச்சுவார்த்தைக்கு புடின் கட்டாயம் வர வேண்டும்; அழைக்கிறது ஐரோப்பிய யூனியன்

பிரஸல்ஸ் : உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புடின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் மூன்றரை ஆண்டுகளை கடந்து நடந்து வருகிறது. இந்தப் போரை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இது உலக நாடுகளை கவலைக்குள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில், போர் நிறுத்தம் தொடர்பான தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அதிபர் புடின் கட்டாயம் வர வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில்; கீவில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்புடன் நான் பேசினேன். புடின் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்.
நம்பகமான மற்றும் உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்கள் மூலம் உக்ரைனுக்கு நீதியான மற்றும் நீடித்த அமைதியை நாம் உறுதிப்படுத்த வேண்டும். ஐரோப்பா அதன் முழு பங்கை வழங்கும். உதாரணமாக, எங்கள் ஷேப் (SAFE) என்ற பாதுகாப்புக் கருவி, உக்ரைன் ஆயுதப் படைகளை வலுப்படுத்துவதில் முக்கியமானதாக இருக்கும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






மேலும்
-
என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்
-
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!
-
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
-
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
-
தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்