இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக மாற்ற நடவடிக்கை; பிரதமர் மோடி

புதுடில்லி: இந்தியாவை சர்வதேச விளையாட்டு மையமாக உருமாற்ற மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அனைவருக்கும் தேசிய விளையாட்டு தின வாழ்த்துக்கள். இந்த சிறப்பு தினத்தில், இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மேஜர் தயான் சந்த்திற்கு மரியாதை செலுத்துவோம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விளையாட்டு களம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. இளைஞர்களின் திறனை வளர்க்கும் அடிப்படை திட்டங்கள் முதல் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் உருவாக்குவது வரை, ஒரு சிறந்த விளையாட்டு உட்கட்டமைப்புகள் உருவாகி வருவதை பார்க்கலாம்.
விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவு அளிப்பது, உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது என இந்தியாவை விளையாட்டுத்துறையின் சர்வதேச மையமாக மாற்ற மத்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.


மேலும்
-
என் குழந்தைகளுக்கு ரங்கராஜ் தான் அப்பா; ஜாய் க்ரிசில்டா பரபரப்பு புகார்
-
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் 9 பேர் இடமாற்றம்!
-
கைலாயம் பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய ஆன்மீக நூலகம்!
-
திருச்செந்துாரில் அதிக கட்டணம் வசூல்: தடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
-
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
-
தமிழகத்தில் முதலீடு செய்ய வெளிநாட்டு தொழிலதிபர்கள் ஆர்வம்: முதல்வர் ஸ்டாலின்