இந்தியாவின் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்!

மும்பை; இந்தியாவில் முதல் டெஸ்லா காரை மஹாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் வாங்கி உள்ளார். முதல் காரை வாங்கி அவர் விற்பனையை துவக்கி வைத்திருக்கிறார்.



ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், இந்தியாவில் டெஸ்லா ஆலையை அமைக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி மஹாராஷ்டிராவின் மும்பையில் டெஸ்லா நிறுவனம் திறக்கப்பட்டது. விழாவில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந் நிலையில் டெஸ்லா காரின் முதல் விற்பனை இன்று (செப்.5) தொடங்கியது. ஏற்கனவே, காரை பதிவு செய்து வைத்திருந்த மஹாராஷ்டிரா போக்குவரத்து அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் இன்று பெற்றுக் கொண்டார். இதை தமது எக்ஸ் வலை தள பதிவில் தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் கூறியதாவது;


இந்தியாவில் டெஸ்லாவின் முதல் காரை நான் வாங்கி உள்ளேன் என்ற பெருமையை பெற்றிருக்கிறேன். முழு தொகையை செலுத்தி வாங்கி உள்ளேன். எந்த தள்ளுபடி விலையும் இல்லை என்றார்.


டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ விற்பனை நிலையத்தில் இருந்து அமைச்சர் பிரதாப் பாபுராவ் சர்நாயக் வாங்கி உள்ள காரின் விலை ரூ.75 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement