வாகனங்களின் விலையை ரூ.1.45 லட்சம் வரை குறைக்கிறது டாடா மோட்டார்ஸ்

புதுடில்லி: ஜிஎஸ்டி மறுசீரமைப்பு எதிரொலியாக பயணிகள் வாகனங்களின் விலையை ரூ.65 ஆயிரம் முதல் ரூ.1.45 லட்சம் வரை குறைக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்கள் பெரிதும் எதிர்பார்த்த ஜிஎஸ்டி சீரமைப்பு வரும் 22ம் தேதி முதல் அமலாகிறது. இதில் சிறிய ரக வாகனங்களுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கார்களின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாகனங்களின் விலையை குறைக்க போவதாக அறிவித்துள்ளது.

இதன்படி சிறிய கார் மாடலான

தியாகோ - ரூ.75 ஆயிரம்

டைகோர் - ரூ. 80 ஆயிரம்

ஆல்ட்ரோஸ் - ரூ.1.10 லட்சம் வரையில் விலை குறைய உள்ளது.

அதேபோல் கர்வ்வி- ரூ.65 ஆயிரம்

எஸ்யுவி மாடலான

ஹாரியர் மாடல் ரூ.1.4 லட்சம் வரையிலும்

சபாரி ரூ.1.45 லட்சம் வரையிலும் விலை குறைக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement