புரோ கபடி: மும்பை அணி வெற்றி

விசாகப்பட்டனம்: புரோ கபடி லீக் போட்டியில் அசத்திய மும்பை அணி, பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தியாவில், புரோ கபடி லீக் 12வது சீசன் நடக்கிறது. இதில் தமிழ் தலைவாஸ், பெங்கால், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் மும்பை, பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரு வீரர்களை இரண்டு முறை 'ஆல்-அவுட்' செய்த மும்பை அணி, முதல் பாதி முடிவில் 29-12 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய மும்பை அணி, ஆட்டநேர முடிவில் 48-28 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இது, மும்பை அணியின் 3வது வெற்றியானது. பெங்களூரு அணி 'ஹாட்ரிக்' தோல்வியடைந்தது. மும்பை அணிக்கு அஜித் சவுகான் (13 புள்ளி), சதிஷ் கண்ணன் (6), ரிங்கு (5) கைகொடுத்தனர். பெங்களூரு சார்பில் ஆஷிஷ் மாலிக், அலிரெசா தலா 6 புள்ளி பெற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்திய வீராங்கனைகள் அபாரம் * உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில்...
-
அர்ஜென்டினா, பிரேசில் அபாரம் * உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில்...
-
வைஷாலி இரண்டாவது வெற்றி
-
தென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி * கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து
-
இந்திய வீரருக்கு ஆப்பரேஷன் * கால்பந்து போட்டியில் காயம்
-
வரி மேல் வரி விதிக்கும் டிரம்ப்; கூடுகிறது 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு
Advertisement
Advertisement