அப்படி செய்யலாமா?

மதுரையில் 'மிர்சி டாக் ஸ்கூல்' நடத்தும் எம்.பி.ஏ., பட்டதாரி ஸ்னேகா, பப்பிக்கு பயிற்சி அளிப்பது குறித்து கூறியதாவது:
பப்பிக்கு எந்த மொழியில் பேசினாலும் புரியாது. அச்சூழலில் நாம் வெளிப்படுத்தும் சைகை, சத்தத்தின் அடிப்படையில் தான், என்ன சொல்ல வருகிறோம் என்பதை புரிந்து செயல்படுகின்றன. வெறுமனே, 'ஓடு', 'உட்கார்', 'நில்', 'நட' என கட்டளைகளை பின்பற்ற சொல்லித்தருவது பயிற்சி அல்ல.
நம் வாழ்க்கை முறைக்கேற்ப அதன் அடிப்படை குணாதிசயத்தில் உள்ள குறைகளை மாற்றுவதே பயிற்சியின் அடிப்படை நோக்கம். அதனால், பப்பியை எப்படி நடத்த வேண்டுமென, உரிமையாளர்களுக்கும் சேர்த்தே சொல்லி தருகிறோம்.
சில நாய்களுக்கு அதன் மரபணுவிலே சில குணாதிசயங்கள் பதிவாகியிருக்கும். குறிப்பாக, புதிய ஆட்களை கண்டால் ஓடி மறைந்து கொள்வது, அதீதமாக பயப்படுவது, தன்னை தானே தனிமைப்படுத்து கொள்வது என அடுக்கிக்கொண்டே போகலாம். முறையான பயிற்சியின் வாயிலாக மட்டுமே இதிலிருந்து விடுவிக்க முடியும்.
சிலர், யு-டியூப்பில் உள்ள சில வீடியோக்களை பார்த்து, தன் பப்பிக்கு பயிற்சி அளிக்கலாம் என களமிறங்குகின்றனர்.
வீட்டிற்குள் இருக்கும் போது வேண்டுமானால் உங்கள் சொல் பேச்சை பப்பி கேட்கலாம். ஆனால், புதிய சூழல், அசாதாரண நிகழ்வுகள் நடக்கும் போது, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென தெரியாமல், உரிமையாளரையே கடிப்பது, பிறரை துரத்துவது, தாவுவது போன்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும், இதுபோன்ற வீடியோக்களில், நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பப்பியை வைத்தே சொல்லித்தருவர். ஆனால், உங்கள் பப்பிக்கு அடிப்படை பயிற்சிகள் வழங்காமல், இதை சொல்லி தந்தால், அவற்றிற்கு புரிந்து செயலாற்ற தெரியாது. ஒரு பப்பி, எந்த சூழலில் ஆக்ரோஷமாக மாறியது என தெரிந்து, முறையான பயிற்சிகள் வழங்கிய பிறகு மீண்டும் அதேசூழலில் அவை பாதுகாப்பாக இருக்க முடியுமென புரிய வைக்க வேண்டும். இல்லாவிடில், அக்குணத்தை மாற்றி கொள்ளாது. செல்லப்பிராணியாக வளர்த்தாலும், பப்பி வெளிப்படுத்தும் ரியாக் ஷன்களை புரிந்து கொள்ள உரிமையாளருக்கு தெரிந்திருக்க வேண்டும்.
தற்போது சோசியல் மீடியாவில், சிலர் பப்பியின் சேட்டைகளை வீடியோவாக பதிவிடுகின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருந்தாலும், தொடர்ந்து செய்யும் போது, அதன் அடிப்படை குணாதிசயத்தையே மாற்றிவிடும். குறிப்பாக, வீட்டிலுள்ள ஒருவரை அடிப்பது போலவும் அதற்கு பப்பி குரைத்து தற்காப்பது போலவும், வீடியோ எடுக்கின்றனர்.
இதை ஓரிரு முறை எடுக்கும் போது, தன் வீட்டிலுள்ளவர்களே பாதுகாப்பற்றவர்கள் என பப்பி புரிந்து கொண்டு கடிக்க முற்படலாம்.
சிலர், வாயில் கேமராவை வைத்து கொண்டு, பப்பியின் முன்னங்கால் பிடித்து சுற்றுவது போல வீடியோ எடுக்கின்றனர். இப்படி சுற்றும் போது, அச்சூழலை அது பாதுகாப்பற்றதாக நினைத்து பயப்படலாம். மேலும், பப்பியின் உடலை பிடித்து தான் துாக்க வேண்டும்.
இப்படி, பப்பிக்கான பயிற்சியில், உரிமையாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி, அவை மகிழ்ச்சியாக வளருவதற்கான சூழலை அமைத்து தர வேண்டும். நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஒரு பப்பி, உரிமையாளர் எதுவும் கட்டளையிடாமலே, அச்சூழலை புரிந்து கொண்டு செயலாற்றும் என்றார்.
மேலும்
-
10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!
-
சீமான் உடன் போக மாட்டேன்; விஜய் கூட கூட்டணி போனால் என்ன? தினகரன் சூசகம்
-
ஹிமாச்சலில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு; 200 மீட்டர் தொலைவு உருண்ட பாறைகள்!
-
கட்சித்தலைமை நடவடிக்கைக்கு முன் செங்கோட்டையன் வெளியிட்ட அறிக்கை!
-
சாதகமான உறவை விரும்புகிறோம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி பதில்
-
வரலாறு காணாத தங்கம் விலை உயர்வு: ஒரு சவரன் ரூ.80,040, ஒரு கிராம் ரூ.10,005!