10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம்!

சென்னை: அதிமுகவை ஒன்றிணைக்க அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ்க்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் பிரிந்து கிடக்கும் அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று அக்கட்சியில் இருந்து அவ்வப்போது கலகக்குரல்கள் எழுவது வழக்கம். அதில் லேட்டஸ்ட்டாக குரல் எழுப்பியர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்.
அவ்வவ்போது சட்டசபையிலும், கட்சியின் நிகழ்ச்கிகளிலும் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்த செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து இருந்த அணிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்ப ஆரம்பித்தார்.
நேற்று நிருபர்களை சந்தித்த அவர், அணிகளை ஒன்றிணைக்க அதிமுகவின் பொதுச் செயலாளர் இபிஎஸ்க்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாக நேரடியாகவே அறிவிப்பை வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார்.
இந் நிலையில் அதிமுகவில் உள்ள கட்சி பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கட்சியின் அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் உள்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. செங்கோட்டையன் ஆதரவாளர்கள் சிலரது கட்சிப்பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.
அவர்களின் விவரம் வருமாறு:
கே. ஏ. சுப்ரமணியன் - நம்பியூர் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்
ஈஸ்வரமூர்த்தி - நம்பியூர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
குறிஞ்சிநாதன் - கோபிசெட்டிபாளையம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர்
தேவராஜ் -அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர்
ரமேஷ் - அத்தாணி பேரூராட்சி கழக செயலாளர்
வேலு - அத்தாணி பேரூராட்சி கழக துணைச் செயலாளர்
மோகன்குமார் - ஐடி பிரிவு துணை செயலாளர், ஈரோடு
திண்டுக்கல்லில் இபிஎஸ் தங்கியிருக்கும் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி. முனுசாமி, தங்கமணி, விஜயபாஸ்கர், நத்தம் விசுவநாதன், சீனிவாசன், காமராஜ் ஆகியோர் இன்று காலை முதல் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை முடிவில், செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
@block_B@வேதனை இல்லை; மகிழ்ச்சி: செங்கோட்டையன்
கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கியதால் வேதனை இல்லை; மகிழ்ச்சியே. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; தர்மம் தழைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்து கூறினேன். என்னிடம் விளக்கம் கேட்காமலேயே நடவடிக்கை எடுத்துள்ளனர். விளக்கம் கேட்டிருக்க வேண்டும் என் நலன் கருதி பேசவில்லை. கட்சியின்
நலன் கருதித்தான் பேசினேன். அதிமுகவை ஒருங்கிணைக்கும் எனது பணி தொடரும். கட்சிப்பதவியை பறிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.
: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டிblock_B
வாசகர் கருத்து (38)
Vasan - ,இந்தியா
06 செப்,2025 - 15:07 Report Abuse

0
0
Reply
Durai Kuppusami - chennai,இந்தியா
06 செப்,2025 - 14:23 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
06 செப்,2025 - 14:20 Report Abuse

0
0
Reply
Tamilan - ,இந்தியா
06 செப்,2025 - 14:16 Report Abuse

0
0
Reply
Tamilan - ,இந்தியா
06 செப்,2025 - 14:05 Report Abuse

0
0
Reply
T.sthivinayagam - agartala,இந்தியா
06 செப்,2025 - 13:54 Report Abuse

0
0
Reply
Haja Kuthubdeen - ,
06 செப்,2025 - 13:51 Report Abuse

0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
06 செப்,2025 - 13:43 Report Abuse

0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
06 செப்,2025 - 13:41 Report Abuse

0
0
Reply
Perumal Pillai - Perth,இந்தியா
06 செப்,2025 - 13:39 Report Abuse

0
0
Reply
மேலும் 28 கருத்துக்கள்...
மேலும்
-
10ம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கினார் சசிகலா; பண மதிப்பிழப்பு காலத்தில் வாங்கியதாக சிபிஐ எப்ஐஆர் பதிவு
-
சென்னை டிஜிபி அலுவலக வாசலில் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதல்!
-
கட்சியின் நலனுக்காக பேசினேன், நீக்குவார்கள் என தெரியாது: செங்கோட்டையன்
-
டிடிவி தினகரன் குற்றச்சாட்டுகளுக்கு நான் பொறுப்பில்லை: நயினார் நாகேந்திரன்
-
அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்
Advertisement
Advertisement