திருச்சியில் 'டாக் ஷோ'

நடுவர் குழுவின் ஏகோபித்த ஆதரவுடன், சாம்பியன் பட்டம் பெறும் திறமை உங்கள் பப்பிக்கு இருந்தால், திருச்சியில் வரும் 14ம் தேதி நடக்கவுள்ள நாய் கண்காட்சிக்கு தயாராகுங்கள்.

டெல்டா கென்னல் கிளப் சார்பில் அனைத்து இன நாய்களுக்கான இரண்டாவது ஓப்பன் ஷோ, திருச்சி, டி.வி.எஸ்., டோல்கேட்டில் உள்ள காஜாமியான் மெட்ரிக் பள்ளியில், செப்., 14ம் தேதி நடக்கிறது. உங்கள் பப்பியை இதில் பங்கேற்க வைக்க விரும்பினா ல், www.dogsnshows.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். அனைத்து இன நாய்களும் பங்கேற்பதால் பார்வையாளராகவும் பங்கேற்று, சாம்பியன் டைட்டில் பெறும் பப்பியை கண்டு ரசிக்கலாம்;அனுமதி இலவசம். உங்களுக்கு ஏற்ற பப்பி வாங்க விரும்புவோர், கண்காட்சியில் பங்கேற்கும் செல்லப்பிராணிகள் துறை சார்ந்த வல்லுனர்களிடம் ஆலோசனை பெறலாம் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Advertisement