திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் கைது: அண்ணாமலை கேள்வி

38


சென்னை: 4 சவரன் திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கடும் கேள்வி எழுப்பி உள்ளார்.


சென்னை நெற்குன்றத்தை சேர்ந்த வரலட்சுமி என்பவர் பஸ்சில் பயணம் செய்த போது 4 சவரன் நகை திருட்டுபோனது. இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக, திருப்பத்தூர் மாவட்டம் நரியம்பட்டு திமுக ஊராட்சி மன்ற தலைவர் பாரதி என்பவர் கைது செய்யப்பட்டார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நீங்கள் திமுகவில் உறுப்பினராகும்போது, ​​கொள்ளையடிப்பதற்கான உரிமம் உங்களுக்கு வெகுமதியாக வழங்கப்படுகிறது.



கீழே உள்ள படத்தில் வட்டமிடப்பட்ட நபர் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திமுக பஞ்சாயத்துத் தலைவர் ஆவார், அவர் ஒரு பஸ்சில் பயணித்த ஒருவரிடமிருந்து 4 சவரன் தங்கத்தை திருடியபோது பிடிபட்டார்.


பஸ்களில் பிக்பாக்கெட் திருடுவது முதல் அரசு கஜானாவில் பணத்தை சூறையாடுவது வரை, திமுக அதன் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொள்ளையடிக்க சம வாய்ப்புகளை வழங்குகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement