'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாடு : கோவையில் செப்., 8, 9ல் நடக்கிறது

ஆறாவது 'இந்தியா டுடே' தென்னிந்திய மாநாட்டை நடத்த கோயம்பத்தூர் தயாராகி விட்டது. நமது பாரம்பரியத்தைப் பாதுகாத்து நிர்வாகத்தை வலுப்படுத்தி ஆக்கபூர்வ உணர்வை ஊக்குவித்து பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்க தென்னிந்தியாவின் செல்வாக்கு மிக்க பல குரல்களை மீண்டும் ஒன்று திரட்ட பிரதானமான 2-நாள் மாநாடு மீண்டும் வந்து விட்டது.

இடையூறு விளைவிக்கும் தொழில்நுட்பத்திலிருந்து நமது யுகத்தை வேறுபாதைக்கு இட்டுச் செல்லும் சக்திகளை ஆராய்வதுடன் புதிய பொருளாதார எல்லைகளுக்கு அரசியல் எல்லைகளை நகர்த்தி கலாசார அடையாளங்களை உருவாக்குவதுடன் பிராந்தியத்தின் விருப்பங்களை நாட்டின் சமூக-பொருளாதார திட்டங்களுடன் ஒன்றிணைக்கும் கோணங்களையும் கோயமுத்தூரின் லீ-மெரிடியன் ஹோட்டலில் செப்டம்பர் 08-09 தேதிகளில் நடைபெறவுள்ள 'இந்தியா-டுடே' மாநாடு தர வல்லது.

செல்வாக்குள்ள தலைவர்கள், புகழ்பெற்ற கொள்கை உருவாக்கும் வல்லுனர்கள், எதிர்காலத்தை முன்பே திட்டமிடும் சிந்தனையாளர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்கும் புதுமையாளர்கள் ஒருங்கே இணைத்து மாற்றம் தரவல்ல கருத்துக்களை பரியமாறி தொடர்ந்து மாறிவரும் உலகில் தென்னிந்தியாவின் இடத்தை வரையறுப்பர்.

மாநாட்டு நாயகராக கர்நாடகாவின் துடிப்பான துணை முதல்வர் டாக்டர் டி.கே. சிவகுமார் விளங்க, அவருடன் ஆந்திர HRD அமைச்சரும், ஆந்திர முதல்வர் என், சந்திரபாபு நாயுடுவின் மகனுமான நரலோகேஷும் இதில் பங்கேற்பார்.

தமிழக தகவல்-தொழில்நுட்ப & டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கர்நாடக துவக்கக்கல்வி & மேநிலைக்கல்வி அமைச்சர் மது பங்காரப்பா, கேரள உள்ளோர் சுய-நிர்வாகம் & சுங்கவரி அமைச்சர் எம்.பி. ராஜேஷ், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழக நிதி & சுற்றுப்புறசூழல் & வானிலை மாற்றம் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழக தகவல்-தொழில்நுட்பம், சுற்றுப்புறசூழல் & வானிலை மாற்றம், தொழில்துறை & வணிகம், சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் டி. ஸ்ரீதர் பாபு ஆகிய ஆறு அமைச்சர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைத் தொடர்களும் குழு-விவாதங்களும் நடைபெறவுள்ளன.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர்கள் பங்கேற்கும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தமும் (SIR) தொகுதிகள் மறுசீரமைப்பும் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ள சூடான தலைப்புகளுள் அடங்கும். சாதிவாரியான ஆய்வு, தென்னிந்தியாவின் கொழிக்கும் தொழிற்பகுதியில் வர்த்த வரிகளின் தாக்கம், தென்னக ரியல் எஸ்டேட் வளர்ச்சியிலுள்ள வாய்ப்புகள் & சவால்கள் மற்றும் சுகாதாரநல வசதிகள் கிடைத்தல் ஆகியவை விவாதிக்கப்படவுள்ள பிற முக்கிய தலைப்புகளுள் அடங்கும்.

“காந்தாரா : அத்தியாயம்-1” போன்ற பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் நாயகியும் 'கர்நாடகாவின் க்ரஷ்' எனவும் அறியப்படும் நடிகை ருக்மிணி வசந்த் மற்றும் இந்திய பார்முலா-ஒன் ரேசிங்கின் 'போஸ்டர்-பாயாக' விளங்கும் நரேன் கார்த்திகேயன் ஆகியோர் இங்கு பேசவுள்ள பிரபலமான பேச்சாளர்களுள் அடங்குவர்.

செல்வாக்குள்ள நபர்களையும் தீர்க்கதரிசன ஞானமுள்ள மனங்களையும் இணத்து இந்தியாவின் வளர்ச்சியையும் உலகில் நிலவும் சூழலையும் உருவாக்கும் சவால்கள், வாய்ப்புகளைப் பற்றி வாதிக்கும் மிகச்சிறந்த மேடிய்யாக கடந்த இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக இந்தியா-டுடே குழுமத்தின் மாநாடுகள் விளங்கி வருகின்றன.

விவாதங்களைத் தூண்டி, கருத்துகளை உருவாக்கி பிராந்தியத்தின் புவியியல்-அரசியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், பண்பாடு, சமூக முன்னேற்றம் மீதான உரையாடல்களை நடத்தும் தமது பாரம்பரியத்தை இந்தியா-டுடேயின் தென்னிந்திய மாநாடு தொடர்ந்து வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆர்வமுள்ளோர் உங்களது சீட்டை www.indiatodayconclave.com என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Advertisement