ஐதராபாத் ரன் குவிப்பு

சென்னை: தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சென்னையில் நேற்று துவங்கிய பைனலில் (4 நாள்) டி.என்.சி.ஏ., லெவன் அணி, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
'டாஸ்' வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
ஐதராபாத் அணிக்கு அமன் ராவ், நிதிஷ் (21) ஜோடி துவக்கம் கொடுத்தது. அடுத்து அமன், ஹிமா தேஜா இருவரும் அரைசதம் அடித்தனர். 98 பந்தில் 85 ரன் எடுத்த அமன், திரிலோக் 'வேகத்தில்' வீழ்ந்தார். ஹிமா 97 ரன்னில் அவுட்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். கேப்டன் ராகுல் சிங் 38 ரன் எடுத்தார்.
முதல் நாள் முடிவில் ஐதராபாத் அணி 296/5 ரன் எடுத்திருந்தது. தமிழகத்தின் சார்பில் திரிலோக் 3 விக்கெட் சாய்த்தார்.

Advertisement