நீச்சல் போட்டியில் இலக்கு அடைய போராடிய வீரர்கள்

கோவை : மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி, கோவை பாரதியார் பல்கலையில் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, 194 பேர் பங்கேற்றுள்ளனர். பட்டர் பிளை, பேக் ஸ்ட்ரோக், பிரீ ஸ்டைல் உட்பட, 10 பிரிவுகளில் போட்டிகள் இடம்பெறுகின்றன.
இதில், 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., என பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்குஏற்ப தனித்தனியே நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்கள் என, 120 பேருக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நேற்றைய போட்டியில் பாய்ந்து சென்று இலக்கை அடைய வீரர், வீராங்கனைகள் போராடினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement