காங்கிரஸ் தலைவர் வீட்டில் புகுந்த முகமூடி கொள்ளையர்கள்!

11

இந்தூர்: மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரியின் வீட்டிற்குள் நள்ளிரவில் நுழைந்து முகமூடி அணிந்த கும்பலின் அட்டகாசம் அரசியல் வட்டாரத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஜிது பட்வாரி உள்ளார். இவரது வீடு இந்துாரில் உள்ளது. நேற்று நள்ளிரவில் முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று இவரது வீட்டில் புகுந்தது.

இந்த கும்பல், பட்வாரியின் வீட்டிற்கு மின்சார இணைப்பை துண்டித்து, வளாகத்தை இருளில் மூழ்கடித்து, உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்தனர்.
அங்கிருந்த அலுவலகத்தில் புகுந்து திருடன் முயற்சி மேற்கொண்டனர். எதுவும் கிடைக்காத நிலையில் அங்க இருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் அருகில் உள்ள குடியிருப்பாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

குடியிருப்பாளர்கள் கூறுகையில், 'கொள்ளையர்கள் ஜன்னல் வலைகளை வெட்டி உள்ளே நுழைய முயன்றனர்' என்றனர்.

அந்தக் கும்பல் அதிகாலை 2 மணியளவில் பிஜல்பூருக்குள் நுழைந்ததாகவும், கடைசியாக அதிகாலை 4:30 மணியளவில் காணப்பட்டதாகவும் கூறினர்.
சிசிடிவி காட்சிகளை முக்கியதடமாக கொண்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து
மாநிலத் தலைவர் ஜிது பட்வாரிக்கு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை வலியுறுத்தியுள்ளது.

Advertisement