மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் விடுவிப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு

மும்பை: மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட ஏழு பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உயிரிழந்தோர் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
மஹாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் மசூதி அருகே, 2008 செப்., 29ல் நடந்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றம், ஜூலை 31ல் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்ட நபர்கள் வெடிகுண்டு வைத்ததற்கான போதிய ஆதாரம் இல்லை எனக்கூறியது.
இதையடுத்து பா.ஜ., முன்னாள் எம்.பி., பிரக்யா சிங் தாக்குர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோஹித், சமீர் குல்கர்னி உட்பட ஏழு பேரை விடுவித்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி, உயிரிழந்த நிசார் அஹமது, சையத் பிலால் உள்ளிட்ட ஆறு குடும்பத்தினர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
மேலும்
-
மாலுமியின் துப்பாக்கியை திருடிய கடற்படை வீரர் கைது
-
துணை ஜனாதிபதி தேர்தலால் 'இண்டி' கூட்டணிக்குள்... குழப்பம்!: 14 எம்.பி.,க்கள் மாற்றி ஓட்டு போட்டதால் சர்ச்சை
-
டாலருக்கு மாற்றாக புதிய கரன்சிக்கு முயற்சிக்கவில்லை
-
ஜி.எஸ்.டி.,2.0: முடிவல்ல, தொடர்ச்சியின் மைல்கல்
-
எஸ்.எஸ்.எல்.வி., ராக்கெட் தயாரிக்கிறது ஹெச்.ஏ.எல்.,
-
லஞ்ச பணத்தை வீசிய ஏ.எஸ்.ஐ., ரூ.5,000 அள்ளி சென்ற மக்கள்