'ஆன்லைன்' சூதாட்ட மோசடி; டில்லியில் ஒன்பது பேர் கைது

புதுடில்லி; மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து நடத்தப்பட்ட, 'ஆன்லைன்' சூதாட்ட மோசடி தொடர்பாக டில்லியில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
டில்லியின் புறநகர் மாவட்டமான சுல்தான்புரியில் உள்ள டி.டி.ஏ., மார்க்கெட்டில், 'ஆன்லைன்' சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த பூபேந்தர், சுராஜ், ராகுல் உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 85,320 ரூபாய் ரொக்கம், ஆறு கம்ப்யூட்டர்கள் மற்றும் சூதாட்டம் தொடர்பான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து போலீசார் கூறியதாவது: 'ஆன்லைன்' சூதாட்டம் தொடர்பான புகாரை அடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். இதில், பூபேஷ் என்பவர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி-. இவர் மீது ஏற்கனவே சட்டவிரோதமாக ஆன்லைன் சூதாட்டம் நடத்தியது தொடர்பாக ஐந்து வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
ஆன்லைன் தொடர்பான இணைப்புகளை சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து, க்யூ.ஆர்.கோடு வாயிலாக ஏராளமானோருக்கு இந்த கும்பல் வழங்கியுள்ளது. இதன் வாயிலாக, பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூன்று மாதங்கள் வரை இயக்கப்படும் இந்த செயலியில் இணைந்து ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடிய பலர் தங்கள் பணத்தை இழந்துள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து இந்த கும்பல் செயல்பட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் கூறினர்.
மத்திய அரசு, சமீபத்தில், ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதா சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான கண்காணிப்புகள் நாடு முழுதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்
-
நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
-
மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
-
விஜய் வரலாற்றைப் படிக்க வேண்டும்; சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்!
-
மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்
-
பெரம்பலூரில் பேச முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார் விஜய்!
-
தென்னிந்தியாவின் மாபெரும் மேடை - இரண்டாம்நாள்