பாட்மின்டன்: சிந்து 'ஷாக்'

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் தோல்வியடைந்தார் சிந்து.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிந்து ('நம்பர்-14'), டென்மார்க்கின் கிறிஸ்டோபெர்சென் ('நம்பர்-27') மோதினர். முதல் செட்டை 21-15 என கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டை 16-21 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட் 19-19 என இழுபறியாக இருந்தது. இதை 19-21 என இழந்தார் சிந்து. முடிவில் சிந்து 21-15, 16-21, 19-21 என போராடி தோற்றார் சிந்து.
ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பிரனாய் ('நம்பர்-34'), 21-17, 21-14 என சீனாவின் குவாங் ஜு லுவை ('நம்பர்-14') வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் லக்சயா சென், 22-20, 16-21, 21-15 என தைவானின் டிஜு வெய் வாங்கை வென்றார்.
கிரண் ஜார்ஜ் ('நம்பர்-38'), 21-16, 21-11 என சிங்கப்பூரின் ஜியா ஹெங்கை ('நம்பர்-24') சாய்த்தார். இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, 15-21, 21-19, 21-13 என தைவானின் லி யாங்கை வென்றார்.
பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்ணா, ஸ்வேதாபர்ணா சகோதரிகள் ஜோடி, 21-17, 21-9 என ஹாங்காங்கின் வனெஸ்சா, சாம் யு ஜோடியை வீழ்த்தியது.
மேலும்
-
மாட்டு எலும்புகள் குவிப்பு: 6 பேர் மீது போலீசில் புகார்
-
பா.ஜ., - எம்.எல்.ஏ.,வை மிரட்டியவர் கைது
-
அரசியல் செய்யும் மஹா., முதல்வர்: துணை முதல்வர் சிவகுமார் எச்சரிக்கை
-
ரூ.1.20 லட்சம் வருவாய்: பி.பி.எல்., கார்டு ரத்து?
-
தசரா யுவ திருவிழா விசில் அடித்து ஆரவாரம்
-
ஹாசன் விநாயகர் ஊர்வலத்தில் புகுந்தது லாரி: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு