ரூ.1.20 லட்சம் வருவாய்: பி.பி.எல்., கார்டு ரத்து?

தாவணகெரே:''ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களின் பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது,'' என, மாநில உணவு பொது விநியோக துறை அமைச்சர் முனியப்பா தெரிவித்தார்.

தாவணகெரேயில் அவர் நேற்று அளித்த பேட்டி:

ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களின் பி.பி.எல்., கார்டுகளை ரத்து செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் அது பற்றி பரிசீலித்து வருகிறோம்.

உள் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட பின், தாவணகெரேயில் நடந்த கூட்டத்தில் சிறப்பான முடிவு எடுத்துள்ளோம். 35 ஆண்டுகால போராட்டம் பலனளித்து உள்ளது. 101 ஜாதிகள் சமமாக பிரிக்கப்பட்டு உள்ளன. அந்தந்த சமூகங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உள் இடஒதுக்கீட்டால் யாருக்கும் அநீதி இழைக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement