கரூரில் தமிழ் கனவு நிகழ்ச்சி


கரூர், கரூரில், மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடந்தது.

உலகத் தமிழ் சங்க துணைத்தலைவர் பர்வீன் சுல்தானா பேசினார். தமிழ் பண்பாட்டின் பெருமையை, கல்லுாரி மாணவர்களுக்கு உணர்த்தும் நோக்கில், தமிழர் மரபும் நாகரிகமும், தமிழ்நாட்டில் சமூக நீதி, பெண்கள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பொருள்களில் தமிழ்நாட்டின் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு நிகழ்ச்சி நடந்தது.


தமிழ்நாட்டின் தொன்மை, சிறப்பை விளக்கும் கீழடி, இரும்பின் தொன்மை, ராஜராஜ சோழன் பெருமை குறித்து, காணொளியில் திரையிடப்பட்டன.டி.ஆர்.ஓ., (நிலமெடுப்பு) விமல்ராஜ், கலால் துறை உதவி கமிஷனர் முருகேசன், கரூர் அரசு கலைக்கல்லுாரி முதல்வர் சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement