பத்மநாபசுவாமி, ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

திருவனந்தபுரம்: கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் மற்றம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மைக்காலமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் சுற்றுலா தலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இந் நிலையில், கேரளாவில் புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோயில் மற்றம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயில்களில் வெடிகுண்டு இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இ மெயில் மூலமக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, போலீசாரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும், இரு கோயில்களுக்கும் உடனடியாக விரைந்தனர்.
கோயில்களில் பல்வேறு பகுதிகளில் அவர்கள் தீவிர சோதனை நடத்தினர். பல கட்டங்களாக நடைபெற்ற இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. இதையடுத்து, மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருப்பினும், கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னதாக இன்று காலை டில்லியில் உள்ள பிரபல தாஜ் ஓட்டலில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டு, சோதனையில் அது வெறும் புரளி என தெரிய வந்தது.
மேலும்
-
டில்லியில் கார் மோதி நிதியமைச்சக அதிகாரி பலி; மனைவி படுகாயம்
-
அண்ணாதுரை பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் அறிக்கை
-
ஒன்றரை மாத ஆண் குழந்தை திருட்டு; 24 மணி நேரத்தில் மீட்பு; 4 பேர் கைது
-
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி; பி.சி.சி.ஐ., மீது பசவராஜ் பொம்மை அதிருப்தி
-
குடிபோதையில் நண்பரை குத்தி கொன்றவர் கைது
-
இன்று இனிதாக பெங்களூரு