பைனலில் லக்சயா சென் * ஹாங்காங் பாட்மின்டனில் அபாரம்

ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் பைனலுக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார்.
ஹாங்காங்கில் சர்வதேச ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் அரையிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தரவரிசையில் 'நம்பர்-6' ஆக உள்ள, தைவானின் தியன் சென் சவ்வை எதிர் கொண்டார். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி 'கேமை' கைப்பற்ற 18-18, 21-21 என இழுபறியானது. பின் அடுத்தடுத்த இரு 'கேமை' வசப்படுத்திய லக்சயா முதல் செட்டை 23-21 என கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் லக்சயா 18-20 என பின்தங்கினார். பின் தொடர்ந்து 4 கேமை கைப்பற்றிய இவர், 22-20 என செட்டை தட்டிச் சென்றார். முடிவில் லக்சயா 23-21, 22-20 என போராடி வென்று, பைனலுக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஜோடி, தைவானின் செங் குவான், பிங்-வெய் லின் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 21-17 என வென்ற இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 21-15 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 21-17, 21-15 என நேர் செட்டில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது.
மேலும்
-
அதிகாரத்தை ருசிக்க வரவில்லை: நேபாள பிரதமர் திட்டவட்டம்
-
டில்லி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் கோளாறு: பயணிகள் 151 பேர் அவதி
-
நேரு மக்களுக்கு ஏற்படுத்திய காயங்கள் ஆறவில்லை: அசாமில் பிரதமர் மோடி பேச்சு
-
மலிவான அரசியல் செய்பவர்களுக்கு பதிலளிக்க அவசியமில்லை: முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
-
விஜய் வரலாற்றைப் படிக்க வேண்டும்; சொல்கிறார் மார்க்சிஸ்ட் சண்முகம்!
-
மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன் பெருமிதம்