நேபாளத்தில் மார்ச் 5ல் பார்லி தேர்தல்: ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்த பார்லிமென்ட் தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று ஜனாதிபதி ராமசந்திர பவுடேலின் அலுவலகம் அறிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற போராட்டங்களால் பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அதை தொடர்ந்து அரசியல் நிச்சயமற்ற தன்மை நீடித்து வந்தது. இந்த நிலையில் போராட்டக்காரர்கள் குழு ஆலோசனையின்படி,இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி 73, பதவியேற்றார்.

இதை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரின் பரிந்துரையின் பேரில் பிரதிநிதிகள் சபையைக் கலைத்த ஜனாதிபதி பவுடேல், அடுத்த பார்லிமென்ட் தேர்தல் 2026, மார்ச் 5ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Advertisement