ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்: உற்பத்தி பாதிப்பு

4

மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன்களை வீசி உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால், அந்த சுத்திகரிப்பு நிலையம் பற்றி எரிந்ததால், கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.


ரஷ்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள லெனின்கிராட் பகுதியில் உள்ள கிரிஷி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன்களை வீசியது. இங்கு தான் 1,77 கோடி மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. முக்கியமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றாக இதுஉள்ளது. இதன் காரணமாக அந்த சுத்திகரிப்பு நிலையம் பற்றி எரிந்த காரணத்தினால், எழுந்த புகைமூட்டம் வானை முட்டும் அளவுக்கு எழுந்தது. அங்கு எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை உறுதி செய்துள்ள உக்ரைன் ராணுவ அதிகாரி, இது குறித்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில், புகைமூட்டமாக காணப்படுகிறது.

அந்த பிராந்திய கவர்னர் அலெக்சாண்டர் ட்ரோஸ்டென்கோ கூறுகையில், உக்ரைன் வீசிய 3 டிரோன்களை சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், அதன் உதிரி பாகம் தான் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது விழுந்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக அது அணைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் இது குறித்து ரஷ்யா அதிகாரிகள் எதுவும் கூறவில்லை. ரஷ்யா ஆக்கிரமிப்பு கிரிமீயா பகுதியில் 80 டிரோன்களை உக்ரைன் வீசியதாகவும், அது அனைத்தும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisement