3 மாதங்களுக்கு பின் கார் திருடியவர் கைது

சேலம்:ராணிப்பேட்டை மாவட்டம் செட்டிதாங்கல், லாலாப்பேட்டை தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 42. இவர், சேலம், அன்னதானப்பட்டி, சங்ககிரி பிரதான சாலையில், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்கிறார்.
நெத்திமேடு, குமர கவுண்டர் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன், 31. இவர் கடந்த ஜூன், 19ல், சுரேஷிடம், விற்பனைக்கு வைத்திருந்த, 'டிசையர்' காரை, பரிசோதனைக்கு எடுத்து செல்வதாக கூறி, அசல் ஆவணங்களுடன் திருடிச்சென்றார். சுரேஷ் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் விசாரித்து, 3 மாதங்களுக்கு பின், நேற்று, சீனிவாசனை கைது செய்து, காரை மீட்டனர்.

Advertisement