மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பரிதாப பலி

குன்றத்துார்; குன்றத்துார் அருகே, வீட்டில் மின் மீட்டரை இடமாற்றம் செய்தபோது, மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீஷியன் பலியானார்.

குன்றத்துார் அருகே தரப்பாக்கம், ராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்பால், 23, எலக்ட்ரீஷியன். இவர், அதே பகுதியில் உள்ள முனுசாமி என்பவரது வீட்டின் கட்டுமான பணிக்காக, மின் மீட்டரை இடம் மாற்றியமைக்கும் பணியில், நேற்று ஈடுபட்டார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக ஜான்பால் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கிய அவரை, அருகில் இருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜான்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்துார் போலீசார், ஜான்பால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, விசாரித்து வருகின்றனர்.

Advertisement