தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா * 'உலக' ஈட்டி எறிதலில் எதிர்பார்ப்பு

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் நீரஜ் சோப்ரா.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், உலக தடகள சாம்பியன்ஷிப் 20 வது சீசன் நடக்கிறது. இந்தியா சார்பில் 14 வீரர்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 19 பேர் பங்கேற்றுள்ளனர். நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல், தகுதிச்சுற்று நடக்கிறது. இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்ற, நடப்பு உலக சாம்பியன் நீரஜ் சோப்ரா, 'ஏ' பிரிவில் பங்கேற்றார். பைனலுக்கு முன்னேற குறைந்தது 84 மீ., துாரம் எறிய வேண்டும் அல்லது 'டாப்-12' பட்டியலில் இடம் பெற வேண்டும்.
இந்நிலையில் முதல் வாய்ப்பில் 84.85 மீ., துாரம் எறிந்த நீரஜ் சோப்ரா, 6வது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் சச்சின் யாதவ், 83.67 மீ., துாரம் எறிந்த போதும், 10 வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தார். ஜாகுப் வாடில்ச் (செக் குடியரசு), ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), ஜூலியஸ் எகோ (கென்யா), ஜூலியன் வெபர் (ஜெர்மனி) உள்ளிட்டோரும் பைனலுக்கு முன்னேறினர்.
மற்ற இந்திய வீரர்கள் ரோகித் யாதவ் (77.81) 28, யாஷ் விர் சிங் (77.51) 30 வது இடம் பிடித்து வெளியேறினர். கடந்த மாதம் 90 மீ.,க்கும் மேல் ஈட்டி எறிந்த பிரேசிலின் லுாயிஸ் டா சில்வா, இம்முறை 81.12., மீ., துாரம் மட்டும் எறிய, 19 வது இடம் பிடித்து, வெளியேறினார்.
பிரவீன் ஏமாற்றம்
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் பிரவீன் சித்ரவேல், அப்துல்லா அபூபக்கர் பங்கேற்றனர். குறைந்தது 17.00 மீ., துாரம் தாண்ட வேண்டும் அல்லது 'டாப்-12' பட்டியலில் இடம் பிடித்தால் பைனல் செல்லலாம். தமிழகத்தின் 16.74 மீ., துாரம் தாண்டிய பிரவீன் சித்வேல் 15வது இடம் பிடித்தார். அப்துல்லா (16.33 மீ.,) 24 வது இடம் பெற்றார். இருவரும் பைனல் வாய்ப்பை இழந்தனர்.
அனிமேஷ் '42)
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டம் தகுதிச்சுற்று நடந்தது. இதன் 3 வது 'ஹீட்டில்' பங்கேற்ற இந்தியாவின் அனிமேஷ் குஜுர், 20.77 வினாடி நேரத்தில் வந்து கடைசி இடம் பெற, அரையிறுதி வாய்ப்பை இழந்தார். ஒட்டுமொத்தமாக அனிமேஷ் 42வது இடம் (மொத்தம் 51) பிடித்தார்.
மேலும்
-
'உலக' ஈட்டி எறிதல்: நீரஜ் சோப்ரா 'ஷாக்' * நான்காவது இடம் பிடித்து சச்சின் அசத்தல்
-
சதம் விளாசினார் துருவ் ஜுரல் * இந்திய 'ஏ' அணி பதிலடி
-
இந்தியா மீதான வரியை அமெரிக்கா ரத்து செய்யும்: பொருளாதார ஆலோசகர் நம்பிக்கை
-
தேர்தலில் நாம் தோற்கவில்லை: கட்சியினரை கலகலப்பூட்டிய கமல்
-
இந்தியாவை சமாளிக்குமா ஓமன்: ஆசிய கோப்பையில் மோதல்
-
புரோ கபடி: ஜெய்ப்பூர் அணி வெற்றி