பிரதமர் மோடிக்கு மெஸ்ஸி 'ஜெர்சி' பரிசு

புதுடில்லி: பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸி, 'ஜெர்சி' பரிசாக அனுப்பியுள்ளார்.
அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அணி, 2022ல் 'பிபா' உலக கோப்பை வென்றது. கடந்த 2011க்குப் பின் மீண்டும், வரும் டிசம்பரில் மெஸ்ஸி, இந்தியா வரவுள்ளார். கோல்கட்டா, ஆமதாபாத், மும்பை, டில்லி என நான்கு நகரங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
டிச. 15ல் டில்லியில் மெஸ்சி, பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனிடையே 75 வது பிறந்த நாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, 2022, உலக கோப்பை தொடரில் அணிந்திருந்த 'ஜெர்சியை' பரிசாக அனுப்பியுள்ளார் மெஸ்ஸி.
இதுகுறித்து மெஸ்ஸி வருகைக்கு ஏற்பாடு செய்த சட்டாத்ரு தத்தா கூறுகையில்,'' கடந்த பிப்ரவரி மாதம் மெஸ்ஸியை சந்தித்து இந்தியா வருவது குறித்து பேசினேன். அப்போது பிரதமர் மோடியின் 75 வது பிறந்தநாள் குறித்து தெரிவித்தேன்.
இதனால், தனது கையெழுத்திட்ட 'ஜெர்சியை' பரிசாக அனுப்பியுள்ளார். அடுத்த ஓரிரு நாளில் இந்தியா வந்தடையும்,'' என்றார்.
மேலும்
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு; ஒரு பவுன் ரூ.81,760க்கு விற்பனை
-
உத்தராகண்டில் மீண்டும் மேகவெடிப்பு: 6 வீடுகள் இடிந்தன: 5 பேர் மாயம்
-
பயங்கரவாத அமைப்புக்கு நிதியளிப்பவர்களிடம் விசாரணை: டிரம்ப் எச்சரிக்கை
-
போதைப்பொருள் நாடுகளின் பட்டியலில் இந்தியா; அமெரிக்கா அடாவடி
-
கொலு போட்டிக்கு அழைப்பு
-
உயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்